» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மலிங்கா அசத்தல் பவுலிங்: இங்கிலாந்துக்கு பேரதிர்ச்சி அளித்த இலங்கை!!

சனி 22, ஜூன் 2019 10:30:18 AM (IST)லீட்ஸில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மலிங்காவின் பந்துவீச்சு, மேத்யூஸின் அரைசதம் ஆகியவற்றால் இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இ்லங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு232 ரன்கள் சேர்த்து. 233 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 47ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.  முன்னதாக இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கருணா ரத்னே(1), பெரேரா(2)ஏமாற்றினர். நடுவரிசை வீரர்கள் பெர்னாண்டோ(49),மெண்டிஸ்(46) ஆகியோர் சிறப்பாக பேட் செய்து ஸ்கோர் செய்தனர். மேத்யூஸ் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த அளவில் யாரும் பேட் செய்யவி்ல்லை. கடைநிலை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா தான் வழக்கமாக நிலைத்து ஆடுவார்கள் ஆனால், நேற்று அவர்கள் ஏமாற்றம் அளிக்க நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நம்பி்க்கை அளித்தார்கள்.பெர்ணான்டோ(49), மெண்டிஸ்(45), மேத்யூஸ்(85) ஆகியோர் அடித்த ஸ்கோர்தான் ஒரளவுக்கு அணியை கவுரவமான எண்ணிக்க பெறவைத்தது.

ஆனால், குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு வலிமையான இங்கிலாந்து அணிைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தொடக்கத்திலேயே பேர்ஸ்டோ விக்கெட்டை எடுத்து மலிங்கா கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து கடைசிவரை மீளவில்லை என்றே சொல்லலாம். குறிப்பாக மலிங்கா மீண்டும் தான் "மேட்ச்வின்னர்”, "மாஸ்டர்கிளாஸ்” பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டா். பேர்ஸ்டோ, ஜோ ரூட், வின்ஸ், பட்லர் ஆகிய 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவானார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

மலிங்காவுக்கு துணையாக பிரதீப், உதனாவின் பந்துவீச்சும் அமைந்தது. மோர்கனை அபாரமான கேட்சால் வீட்டுக்கு அனுப்பிய உதனா, கடைசிநேரத்தில் மார்க்உட் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்த பிரதீப், சுழற்பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்திய டி சில்வா ஆகியோரும் வெற்றிக்கு துணை செய்தார்கள். ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றிதான் இது. கடந்த 10 போட்டிகளாக தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தவந்த இங்கிலாந்துக்கு இந்த தோல்வி பேரதிர்ச்சிதான்.  பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட இங்கிலாந்து அணி பேட்டிங்கில் கோட்டை விட்டது. 
 
அதுமட்டுமல்ல கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து (2007,2011,2015) இலங்கை அணியிடம் தொடர்ந்து இங்கிலாந்து 4-வது முறையாக தோல்வி அடைந்துள்ளது. 12 ஆண்டுகள் வரலாற்றை இலங்கை அணி தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இதைக்காட்டிலும் முக்கியமான விஷயம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையுமா என்பதுதான். இங்கிலாந்துக்கு அதற்குரிய திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.ஆனால், வரலாறு மீண்டும் உண்மையாகிவிடக்கூடாது. 

என்னவென்றால், கடந்த 27 ஆண்டுகளாக உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளை இங்கிலாந்து வென்றதே இல்லை. இந்த சூழலில் அடுத்து இங்கிலாந்து அணி, இந்த 3 அணிகளுடன்தான் மோதப்போகிறது முடிவுகள் எப்படி அமையுமோ…. உலகக்கோப்பைப் போட்டி இப்போதுதான் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான புள்ளிகள் வித்தியாசம் ஒரு புள்ளியில் இருப்பதால், அடுத்தடுத்து போட்டிகளின் வெற்றி, தோல்விகள் சுவாரஸ்யமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

முதலிடத்தில் உள்ள ஆஸி.10 புள்ளிகள் இருக்கும் நிலையில் முறையே நியூஸி(9), இங்கிலாந்து(8), இந்தியா,(7), இலங்கை(6), வங்கதேசம்(5) என ஒரு புள்ளி இடைவெளியில் செல்கிறது. "கரணம் தப்பினால் மரணம்” என்ற கணக்கில் கத்தி மீது நடப்பதுபோன்று வரும் போட்டிகள் அணிகளுக்கு அமையும். இங்கிலாந்து அடுத்துவரும் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வி தழுவினால் நிச்சயம் பெரிய சிக்கல்தான். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory