» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நம்ப முடியாத 6 சிக்ஸர்கள் : யுவராஜ் சிங்குக்கு ஷோயப் அக்தர் புகழாரம்

புதன் 12, ஜூன் 2019 12:18:24 PM (IST)ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங்கிற்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.,

கிரிக்கெட்டையும் தாண்டி, நாடுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளைக் கடந்த நட்பு முகம் யுவராஜுடையது, அந்த வகையில் ஷோயப் அக்தர் யுவராஜ் சிங்கை புகழ்ந்து தள்ளியுள்ளார். யூ டியூப் சேனலில் அக்தர் கூறியிருப்பதாவது: ராக் ஸ்டார், மேட்ச் வின்னர் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். யுவராஜ் சிங் போன்ற ஒரு நளினமான இடது கை வீரரை இந்தியா இதுவரை உருவாக்கியதில்லை என்றே நான் கருதுகிறேன்.  மிகவும் அனாயசமாக, சரளமாக ஆடக்கூடியவர்.

 2003 உலகக்கோப்பையில் சென்சூரியனில் அவர் மிக அழகான ஒரு இன்னிங்சை ஆடியது என் நினைவில் உள்ளது.  நான் அவரிடம் சென்று பேசினேன். கிரிக்கெட் பற்றிய அவரது ஆழமான அறிவு எனக்கு பிரமிப்பூட்டியது. யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்கள் நம்பமுடியாதது. நான் அப்படியொன்றை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரேட் கிரிக்கெட்டர், கிரேட் ஃப்ரெண்ட், மிகவும் நாட்டுப்பற்றுள்ள இந்தியர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது எண்ணம், அவர் பின் வரிசையில் களமிறங்கும் போதெல்லாம் நாங்கள் அவரை அவுட் செய்வதன் முக்கியத்துவத்தை விவாதித்துள்ளோம், ஏனெனில் அவர் மேட்ச் வின்னர். அவரது சிறந்த எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள், என்றார்.

ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி, "அருமையான கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள். பிரமாதமான பேட்ஸ்மேன், அற்புத பீல்டர், பெரிய மேட்சுக்கான பொறுமையும் அணுகுமுறையும் உள்ளவர், அவரது போராட்டக் குணம் எங்களுக்குமே அகத்தூண்டுதலாக இருந்தது. , இருவரும் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம், வரும் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory