» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

செவ்வாய் 21, மே 2019 5:33:58 PM (IST)

ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.
 
மெதுவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory