» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் ரன்-அவுட் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது : சச்சின் டெண்டுல்கர்

திங்கள் 13, மே 2019 1:53:06 PM (IST)

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: இந்த ஆட்டத்தை லசித் மலிங்கா மிகவும் சிறப்புடன் முடித்து வைத்தார். 

ஒரு முனையில் க்ருணால் பாண்டியா ரன்களை வாரி வழங்கினாலும், மறுமுனையில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. சுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர், ஹார்த்திக் பாண்டியாவின் ஆட்டமும் நல்ல முறையில் அமைந்திருந்தது. 6-ஆவது ஓவரில் இருந்து 15-ஆவது ஓவர் வரையிலான காலகட்டம் தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதிலும் எம்எஸ் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்ட்தின் போக்கையே மாற்றியது என்று தெரிவித்தார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory