» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் டென்னிஸ் பயிற்சி முகாம்

திங்கள் 22, ஏப்ரல் 2019 7:35:04 PM (IST)
தூத்துக்குடியில் டென்னிஸ் விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி பிஎம்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்மார்ட் டென்னிஸ் அகாடமி சார்பில், கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ஐடிஎஸ் டென்னிஸ் பயிற்சியாளர் ரவிசங்கர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தார். தொடர்ந்து, மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் மாணவர் கௌரவ், சஞ்சய், மகேஷ் ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பிஎம்சி பள்ளிக் குழும தாளாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். 

தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும், போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் அவர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், செயின்ட் தாமஸ் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சேவியர்,  டென்னிஸ் பயிற்சியாளரும், பல் மருத்துவருமான ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஸ்மார்ட் டென்னிஸ் அகாடமி இயக்குநர் பாலவிக்னேஷ் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory