» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி எங்களுக்கு மிகப்பெரும் பயத்தை காட்டி விட்டார்: விராட் கோலி

திங்கள் 22, ஏப்ரல் 2019 10:40:47 AM (IST)தோனி எங்களுக்கு மிகப்பெரும் பயத்தை காட்டி விட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் அவுட் ஆகினார் தாக்கூர். ஒரு ரன்னில் வெற்றிவாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கள் சேர்த்தார் இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

வெற்றிக்கு பின் பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி பேசியதாவது:-” 19-வது ஓவர் வரை நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம்.  கடைசிப்பந்தில் நடந்த ரன் அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்து விட்டது. சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி தன்னால் என்ன சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை செய்தார். எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் தோனி மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார்” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory