» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியை சேர்த்தாலும் இந்திய அணி வலுவாகாது: கம்பீர்

வியாழன் 14, மார்ச் 2019 4:18:28 PM (IST)

இந்திய அணியில் தோனியை சேர்த்தாலும் அதில் பெரிதாக எந்த மாற்றமும் நடக்காது என முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸி அணி டி- 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த 5 ஆவது போட்டியில் ஆஸி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய கேப்டன் கோஹ்லி, ‘உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த அணியில் தோனி மற்றும் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே இன்னும் இணைய இருக்கிறார்கள்.’ எனறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கம்பீர் ‘உலகக்கோப்பை அணி விவரம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல் பிறகு உலகக்கோப்பைதான் ஆகவே அணியில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணியாக இருக்க முடியாது என்று உத்தரவாதமாகக் கூறுகிறேன். விராட் கோலி இந்தியாவின் உலகக்கோப்பை அணி இதுவாகவிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த லெவன் நிச்சயம் நம்பிக்கையளிப்பதாக இல்லை. தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் கூட இந்த பிளேயிங் லெவனில் எந்த ஒரு தாக்கமும் ஏற்பட்டு விடப்போவதில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory