» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு

சனி 13, அக்டோபர் 2018 11:16:37 AM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவத்தில் 19 வயது இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, மைதானத்துக்கு உள்ளே நுழைந்து ரசிகர் ஒருவரும் முத்தம் கொடுக்க முயன்ற நடந்துள்ளது. இந்த சம்பவத்தால், மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்தப் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் குதித்து விட்டார்.

அவர் தொடர்ந்து கோலிக்கு அருகில் வந்து தனது போனை எடுத்து ஒரு செல்ஃபி எடுக்க முயன்றார். ரசிகரின் இந்த செயல் கோலியை மிகவும் எரிச்சல் படுத்தியது. அந்த ரசிகர் தொடர்ந்து, கோலிக்கு முத்தமிட முயன்றார். ஆனால், பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகள் ரசிகரை தடுத்து, மைதானத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர். இந்நிலையில், விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவத்தில் 19 வயது இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுகுறித்து  உப்பல் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், ஹைதராபாத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியை காண கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்திருந்த முகமது கான் (19) கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்று விராட் கோலியுடன் கட்டிப்படித்து செல்ஃபி எடுக்க முயன்றார். விசாரிக்கையில் அவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் என தெரிவித்தார். எனவே போட்டியின் போது மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்ற காரணத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory