» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை

திங்கள் 17, செப்டம்பர் 2018 7:42:12 PM (IST)
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில், மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.  இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விராட்கோலி தான் விளையாடும் போட்டிகளில் எல்லாம் ரன்குவித்தும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்தும் வருகிறார். அதேபோல், பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு, சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory