» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சதம் அடிக்க உதவிய பும்ராவுக்கு நன்றி : அலஸ்டைர் குக்

செவ்வாய் 11, செப்டம்பர் 2018 3:38:14 PM (IST)



சதம் அடிக்கும் நெருக்கடியில் இருந்த எனக்கு ஓவர் துரோ மூலம் ரன் கொடுத்த பும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியோடு ஒய்வு பெற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான அலஸ்டைர் குக் நேற்று சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற அரிய சாதனையை குக் படைத்து இருக்கிறார். 

2006-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் குக் (ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள்) சதம் அடித்து இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்த 40-வது வீரர், இங்கிலாந்து அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள குக் இடைவிடாது தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் (150 டெஸ்ட்) பங்கேற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். 

இந்த அரிய சாதனையை நிகழ்த்திய குக், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தன்னை நெருக்கடியில் இருந்து விடுவித்தற்காக பும்ராவுக்கு நன்றி சொல்வதாக கலகலப்பாக பேசினார். தனது பேட்டியின் போது குக் கூறியதாவது:- " 97 ரன்களில் இருந்த போது மேலும் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என நான் நினைத்து இருந்தேன்.எனவே, பும்ராவின் ஓவர் த்ரோ என்னை தலைவலியில் இருந்து விடுவித்தது. பும்ரா இந்த தொடர் முழுவதும் எனக்கு தலைவலியாகவே இருந்தார். அவரை பொறுத்தவரை, எனக்கு சிறு வாய்ப்பை கொடுத்தார். எனவே, இதற்காக பும்ராவுக்கு நான் சில நொடிகள் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory