» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி 51 ரன்களில் அவுட்: போராடி தோற்றது இந்திய அணி!!

சனி 4, ஆகஸ்ட் 2018 5:42:08 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போாடி தோல்வியை தழுவியது. 

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா விராட் கோலிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் ஒன்று, இரண்டு ரன்களை எடுத்தார்.

விராட் கோலி 51 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனதால் ஆட்டம் கைநழுவ ஆரம்பித்தது. அடுத்து இறங்கிய மொகமது ஷமி டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 11 ரன்களில் அவுட்டானார். இறுதி வரை ஹர்திக் பாண்ட்யா போராடினார். அவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory