» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது

சனி 4, ஆகஸ்ட் 2018 10:44:56 AM (IST)



டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், தோதாத்ரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory