» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்தல் சதம்: விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்தார் கோலி

வெள்ளி 3, ஆகஸ்ட் 2018 12:46:15 PM (IST)

 எதிரான முதல் டெஸ்டில் தனியாளாக விளையாடி சதமடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் விமர்சனம் செய்தவர்களை வாயடைக்க வைத்தார். 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி பொறுமையாகவும் பொறுப்புடனும் விளையாடி 149 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 22வது சதமாகும்.

2014ல் இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 5 டெஸ்ட்களில் 10 இன்னிங்ஸில் விளையாடிய கோலி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்களே எடுத்திருந்தார். இங்கிலாந்து தொடர் துவங்கும்போது, இந்திய அணி குறித்தும், குறிப்பாக கோலி குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. 2007க்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியா வென்றதில்லை. இந்த முறையும் இந்தியா தோல்வியே அடையும், கோலியின் பேட்டிங் எடுபடாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் கோலி. மனைவி அனுஷ்கா சர்மா அளித்த திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை, கழுத்தில் உள்ள செயினில் மாட்டியுள்ளார் கோலி. சதமடித்ததும், அதை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தின்போது, பல சாதனைகளை, மைல்கல்களை கோலி எட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் குவித்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அரை சதங்களை சதமாக மாற்றுவதில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் கோலி. 2014 சுற்றுப் பயணத்தில் 5 டெஸ்ட்களில், 10 இன்னிங்ஸ்களில் எடுத்ததைவிட, இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே அதிக ரன்களை எடுத்துள்ளார் கோலி. இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன், டெஸ்ட் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட சதம் அடித்த கேப்டன் என பல மைல்கல்களை எட்டி, பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் கோலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory