» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் 37வது பிறந்தநாள் : பிரபலங்கள் ரசிகர்ள் வாழ்த்து

சனி 7, ஜூலை 2018 3:52:04 PM (IST)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார். 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி, தனது திறமையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றி கேப்டன் தோனி.

2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக ஆடிவருகிறார். இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார் தோனி. தன் மீதான விமர்சனங்கள் எழும்போதெல்லாம், தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்கவைத்து தன்னை அணியின் முக்கியமான வீரராக நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்.

இன்று தோனியின் 37 வது பிறந்த நாள். தனது மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை தோனி கொண்டாடியுள்ளார். தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கிலாந்தில் தான். இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டி தோனிக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இது தோனிக்கு 500-வது சர்வதேசப் போட்டியாகும். அவரது பிறந்த நாளுக்கு கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory