» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

குல்தீப் யாதவ்.. ராகுல் அபாரம்: முதல் டி-20-யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!!

புதன் 4, ஜூலை 2018 10:37:50 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார். 

இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் டி-20 போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. சமீபத்தில் நடந்த ஒருதினப் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை 6-0 என்ற கணக்கில் வென்ற சூப்பர் பார்மில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.  ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன், சமீபத்தில் அயர்லாந்தை 2-0 என டி-20 தொடரில் வென்ற நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது. 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஜாசன் ராய் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லருடன் சேர்ந்து அவர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஜோஸ் பட்லர் அபாரமாக அடித்து விளையாடினார். 46 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 69 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் டேவிட் வில்லி 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்தி அணி 159 ரன்கள் எடுத்தது.



இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, ஹார்திக் பாண்டயா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. துவக்கத்தில் ஷிகர் தவன் (4 ரன்கள்) விக்கெட்டை இழந்தாலும், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஜோடி அபாரமாக ஆடியது. நிதானமாக ஆடிய ரோகித் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் லோகேஷ் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் 54 பந்துகளில் 101 ரன்களுடனும், கேப்டன் கோலி 22 ரன்கள் ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory