» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்திய ஏ அணி: டிராவிட் மகிழ்ச்சி!!

செவ்வாய் 3, ஜூலை 2018 12:40:17 PM (IST)லன்டனில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை இந்திய ஏ அணி கைப்பற்றியது. இதுகுறித்து பயிற்சியாளர் டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளின் ஏ அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியின் இறுதிப் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து ஏ அணியின் ஹையின் 108, லிவிங்ஸ்டோன் 83 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள். இதனால் 34-வது ஓவரில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

ஆனால் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி இங்கிலாந்து ஏ அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்திய ஏ அணியில் சஹார், கலீல் அகமது தலா 3 விக்கெட்டுகளும் தாக்குர் 2 விக்கெட்டுகளும் எடுத்து இங்கிலாந்தின் ரன் வேட்டையைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து ஏ அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே பொறுப்புடன் விளையாடியதால் இலக்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து முத்தரப்புப் போட்டியை வென்றது இந்திய ஏ அணி. மயங்க் அகர்வால் 40, ஸ்ரேயஸ் ஐயர் 44, விஹாரி 37 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தார்கள். ரிஷப் பண்ட் 64, க்ருணால் பாண்டியா 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இந்திய ஏ அணியின் வெற்றி குறித்து பயிற்சியாளர் டிராவிட் கூறியதாவது: இந்தப் போட்டியில் மிகத் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம். பலர் இந்த நாட்டில் முதல்முறையாக விளையாடுகிறார்கள். எனவே அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டோம். திறமையை வெளிப்படுத்தியுள்ள வீரர்கள் தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். உலகக் கோப்பைக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில் மாற்று வீரர்கள் நிறைய பேர் உருவாகியுள்ளார்கள்.  வீரர்களின் பங்களிப்பும் முன்னேற்றமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory