» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார் லியாண்டர்!

திங்கள் 4, ஜூன் 2018 5:53:02 PM (IST)



வரும் ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப். 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 27 முதல் தொடங்கவுள்ள யு.எஸ். ஓபன் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி பங்கேற்கவுள்ளார். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் அணியில் லியாண்டர் பெயஸ், ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகல், ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரன் ஆகியோரும் இந்திய மகளிர் அணியில் அன்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தண்டி, ருதுஜா போஸேல், பிரஞ்ஜாலா யத்லபள்ளி, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய ஆடவர் அணிக்கு ஜீஸன் அலியும் மகளிர் அணிக்கு அன்கிதா பாம்ப்ரியும் பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

2006-க்குப் பிறகு இப்போதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் லியாண்டர் பெயஸ் இடம்பெற்றுள்ளார். இப்போட்டியில் அவர் 8 பதக்கங்களை வென்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory