» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு : அதிர்ச்சியில் ரசிகர்கள்

புதன் 23, மே 2018 6:42:23 PM (IST)

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து டிவில்லியர்ஸ் தெரிவித்ததாவது,நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவாகும். நன்கு விளையாடும்போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று எண்ணினேன். 

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றி களுக்குப் பிறகு, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன். டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். டு பிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார். டிவில்லியர்ஸ் முடிவால் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory