» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி முடிவு?

வியாழன் 17, மே 2018 5:29:51 PM (IST)

டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தந்த நாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடரின் போது, பிட்ச் உள்ளிட்ட சாதக சூழல்களை போட்டி யை நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக அமைத்து கொள்கின்றன. இதனால் போட்டிகளின் முடிவு ஒருதலைபட்சமாக அமைகிறது என ஐசிசி கருதுகிறது. அதனால் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ் இணையதளம் இஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சொந்த நாட்டின் சூழலை சாதகமாக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக, டாஸ் போடும் முறையை கைவிட பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அணியின் கேப்டன், பேட்டிங்கா பவுலிங்கா என்பதை டாஸ் போடாமலே தேர்வு செய்யலாம். இதன்மூலம் போட்டி நடைபெறும் நாட்டு அணி, பிட்ச் உள்ளிட்ட சில சூழல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தாதவாறு தடுக்க ஐசிசி திட்டமிட்டு உள்ளது. 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் இந்த முயற்சியை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory