» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பார்முக்கு திரும்பிய போலார்டு; புஸ்வானமாகிய யுவராஜ்

வியாழன் 17, மே 2018 3:45:12 PM (IST)நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் போலார்டு பார்முக்கு திரும்பினார். ஆனால், யுவராஜ் புஷ்வானமாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். 

ஐபிஎல்-இன் நேற்றைய (புதன்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. நடப்பு சீசனில் பார்மை இழந்து தவித்து வந்த மும்பை அணியின் போலார்ட்டு 7 போட்டிகளில் 78 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். இருப்பினும் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா, டுமினிக்கு பதிலாக போலார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கினார். இந்த சீசனில் முதலில் சொதப்பி வந்த போலார்டு ஒருவழியாக நேற்று இக்கட்டான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் மும்பை அணிக்கு கைகொடுத்து உதவினார். 

டாஸை இழந்த மும்பை அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி புயல் வேகத்தில் ரன் குவித்து வந்த அந்த அணி ஒரு கட்டத்தில் வரிசையாக 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 6வது வீரராக களமிறங்கினார் போலார்டு. விக்கெட்டுகளை இழந்து வந்த மும்பை அணிக்கு க்ருணால் பாண்டியாவுடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். தொடர் விக்கெட்டுகளால் இறங்கிய ரன் ரேட்டை மீண்டும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விரட்டி உயர்த்தினார். அவர் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் குவித்தார். மும்பை அணி 186 ரன்களை எடுத்தற்கு இவருடைய பங்களிப்பு மிக அவசியம். 

நடப்பு சீசனில் பார்மை இழந்து தவித்து வரும் மூத்த வீரர்களுள் யுவராஜ் சிங்கும் ஒருவர். இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் மட்டுமே யுவராஜ் சிங் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் அனைத்து பேட்ஸ்மேனும் சொதப்பி வருவதால் 2, 3 போட்டிகளுக்கு ஒரு முறை அஸ்வின் வீரர்களை மாற்றிக் கொண்டு வந்தார். அதே யுத்தியை நேற்றும் கடைபிடித்த அஸ்வின் மயங்க் அகர்வால் மற்றும் கருண் நாயரை நீக்கிவிட்டு யுவராஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பை வழங்கினார் .

ஆனால், வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு எளிதாகிவிடும் என்ற முக்கியமான போட்டியிலும் யுவராஜ் சிங் சொதப்பினார். 187 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடிய பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது தான் யுவராஜ் சிங் களமிறங்கினார். தனது அனுபவம் மற்றும் அதிரடி மூலம் பஞ்சாப்பின் வெற்றிக்கு உதவி பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். அதன் விளைவாக பஞ்சாப் அணி இந்த போட்டியில் 3 ரன்களில் தோல்வியடைந்தது. 
இந்த போட்டி பார்மில்லாமல் தவித்து வந்த போலார்டுக்கு கைகொடுக்க, யுவராஜுக்கு மேலும் ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory