» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜெர்ஸி நம்பரை மாற்றி போட்டியில் அசத்திய குல்தீப்!

புதன் 16, மே 2018 4:35:14 PM (IST)கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கிய இறுதியில் அமைதியாக ஆட்டத்தை முடித்தது. 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். நேற்று குல்தீப் யாதாவ் ஜெர்ஸி நம்பரை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். ஜெர்ஸி நம்பர் மாற்றம் அவருக்கு சாதகமாக அமையுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ஜெர்ஸி நம்பர் மாற்றம் மேஜிக் செய்தது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் சரியாக பந்துவீச குல்தீப் நேற்றைய போட்டியில் அசத்தினார். போட்டிக்கு பின் ராஜஸ்தான் அணியின் கோச் வார்னே உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory