» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பையிடம் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் ஷாருக் கான்!!

வியாழன் 10, மே 2018 3:38:48 PM (IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். 

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.

நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெற்றி தோல்வியால் விளையாட்டு பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory