» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தொடரை வென்று இந்திய அணி சாதனை

புதன் 14, பிப்ரவரி 2018 11:32:12 AM (IST)



தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தொடரை வென்று கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 4-1 என்று கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி விளையாடியது.  அந்த அணியின் கேப்டன் மார்க்ராம் 32 ரன்னிலும், டுமினி 1 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 6 ரன்னிலும், டேவிட் மில்லர் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  

ஆம்லா 71 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று கிளாசன் 39 ரன்களிலும், பெஹ்லுக்வாயோ 0 ரன்களிலும். ரபடா 3 ரன்களிலும், மோர்கெல் 1 ரன்களிலும் மற்றும் சாம்சி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  நிகிடி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  அணியானது 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory