» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா ? விராட்கோலி பதில்

வியாழன் 8, பிப்ரவரி 2018 8:25:31 PM (IST)

2019 உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப், சாஹல் இடம் பெறுவார்கள் என கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்தார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும்  சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர்.முதலில் பேட் செய்து இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இவர்கள் விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை ஜெயிக்க வைத்து விடுகின்றனர் இதனால் அடுத்தடுத்து நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர்.

ல்தீப், சாஹல் ஜோடி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், சராசரி 9.05 ஆகும். இந்நிலையில், குல்தீப், சாஹல் ஜோடியை அடுத்து நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படுவது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்சமயம் குல்தீப் மற்றும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதுவும் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் தங்களின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களின் சுழற்பந்து மூலமாக எதிரணி மீது வலைவீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக எட்டு விக்கெட்டுகளை இவர்களுக்கு வீழ்த்தி விடுகின்றனர். இது நம்பமுடியாத செயலாகும். பந்துவீசும் போது இவர்களின் தைரியம், தன்நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி பாராட்டு தலுக்குரியது. 

 இவர்களின் இந்த ஆட்டத்திறன் இப்படியே இருந்தால் வருகிற 2019 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத சக்தியாக குல்தீப், சாஹல் அமைவர் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory