» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்வேன்: தடகள வீராங்கனை விரக்தி

புதன் 7, பிப்ரவரி 2018 10:18:33 PM (IST)

காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பாரா தடகள வீராங்கனை சாகினா காதூன் கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018 ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் பட்டியல் பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் சேர்க்கப்படவில்லை. தனது பெயர் பார ஒலிம்பிக் போட்டிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சாகினா காதூன் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது: என் பெயரை இன்னும் பட்டியலில் சேர்க்கும் வரை காத்திருக்கிறேன். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் கடைசி வரை போராடுவேன், பிறகு என் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் ஏன் என்றால் அவர்கள் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர். நான் இதை விட்டுவிட மாட்டேன். இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்னால் தற்கொலை கூட செய்து கொள்வேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளுக்கு நான் காத்திருக்கிறேன். 

இதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன் என கூறினார். காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்குஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். பாரா ஒலிம்பிக் கமிட்டியும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சாகினாவை சேர்த்து கொள்ள பரிந்துரைத்து உள்ளது. ஆனால் இது வரை எந்த தகவலும் வரவில்லை. 28 வயதாகும் சாகினா காதூன் காமன் வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory