» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாஹல் சுழலில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: இந்திய அணி அபார வெற்றி!!

ஞாயிறு 4, பிப்ரவரி 2018 10:08:02 PM (IST)தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். நிலைத்து நின்று ஆடுவதற்கு வாய்ப்பின்றி அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 

32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டுமினி, சோண்டோ ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். ஆம்லா 23 ரன்களும், டிகாக் 20 ரன்களும் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். தென்னாப்பிரிக்க அணியில் எந்த பேட்ஸ்மேனும் 30 ரன்களை கடக்கவில்லை. இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சாஹல் 8.2 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஒருநாள் போட்டிகளில் சாஹல், 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் இணைந்த ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஜோடி சூப்பராக விளையாடிய வீரர்கள், 50 ஓவர் போட்டியை இந்திய வீரர்கள் 20.3 ஓவர்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்தனர். 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

ஷிகர் தவான் 51 ரன்களும், விராட் கோலி 46 ரன்களும் விளாசினர். 2 வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக தற்போதைய வெற்றி உள்ளது. மூன்றாவது போட்டி வரும் 7-ஆம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. ஆட்டநாயகன் விருதை சூழலில் அசத்திய சகால் தட்டி சென்றார். தென்ஆப்பிரிக்காவை 118 ரன்களுக்குள் சுருட்டியதன் மூலம் சொந்த மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 14.2 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்கள். இந்த போட்டியில் 118 ரன்களில் சுருண்டதன் மூலம் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் அடித்த மிகவும் குறைவான ஸ்கோர் என்ற மோசமான சாதனையை தென்ஆப்பிரிக்கா தன் வசமாக்கியுள்ளது. இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 119 ரன்னில் சுருண்டது மிகவும் குறைவான ஸ்கோராக அமைந்துள்ளது. மேலும் 1996-ல் இங்கிலாந்திற்கு எதிராகவும், 2011-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் 129 ரன்னில் சுருண்டுள்ளது. 2009-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 145 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory