» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்படாததற்கு மூத்த வீரர் எதிர்ப்பு

வியாழன் 11, ஜனவரி 2018 8:08:18 PM (IST)

தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. இந்த முடிவுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ரஹானாவை அணியிலிருந்து வெளியேற்றியது தவறானது. கடந்த முறை இங்கு வந்தபோது மிகச்சி றப்பாக விளையாடினார். என்னைப் பொறுத்த வரை, கப்பலை நிலைநிறுத்த ரஹானே முக்கியமானவர். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுக்கக் கூடியவர். ரஹானே அணியில் இல்லாததைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள். மிகவும் உலகத் தரமான வீரர் அவர். 

இந்திய அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. முதல் டெஸ்டில் மிகச்சிறப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் பந்துவீசினார்கள். முதல் டெஸ்டில் அவர்களுக்குக் கிடைத்த பலன்களை அடுத்த டெஸ்டிலும் கொண்டு செல்வார்கள். தென் ஆப்பிரிக்க அணி வேகமான பந்துவீச்சை நம்பியுள்ளது. ஆனால் இந்திய அணி பல்வேறு வகையான பந்துவீச்சுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory