» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உங்கள் கிரிக்கெட் வாழ்வை திரும்பி பாருங்கள் : தோனியை விமர்சித்தவர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி

செவ்வாய் 14, நவம்பர் 2017 7:45:46 PM (IST)

தோனியை குறை சொல்பவர்கள் முதலில் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியின் தோல்விக்கு முன்னாள் கேப்டன் தோனியின் மோசமான ஆட்டம் காரணமாக தெரிவிக்க ப்பட்டது. இதனால் லட்சுமண், அகார்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் டி-20 போட்டியில் தோனி ஓய்வு பெற்றால் சிறந்தது என தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புக்கள் கிளம்பியது.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஆதரவாக க இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.அவர் கூறுகையில், தோனியை குறை சொல்லும் முன், சொல்பவர்கள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். தோனிக்குள் இன்னும் ஏகப்பட்ட திறமைகள் உள்ளது. அதனால் அந்த ஜாம்பவானின் திறமையை மதிக்க வேண்டியது, அணியின் கடமை. தவிர, விக்கெட் கீப்பங்கில் தோனியை மிஞ்ச இதுவரை வேறு ஆள் இல்லை. என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory