» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 போட்டி : 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்

திங்கள் 13, நவம்பர் 2017 8:06:05 PM (IST)

தென்ஆப்பிரிக்காவின் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.

தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டைட்டன்ஸ், லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லயன்ஸ் அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்த போது மழைக்குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. பின் டைட்டன்ஸ் அணிக்கு 15 ஓவரில் 135 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய டைடன்ஸ் அணிக்கு குயிண்டான் டி காக் (39 ) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த டி வில்லியர்ஸ், தனது வழக்கமாக பாணியில் விளையாடி 19 பந்தில் அரைசதம் விளாசினார்.கேப்டன் அல்பி மோர்கல் (41) இவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க, டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டியது. இதன் மூலம் டைட்டன்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory