» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலியின் நம்பிக்கையை தோனி காப்பாற்ற வேண்டும்: கங்குலி பேட்டி

வெள்ளி 10, நவம்பர் 2017 5:11:22 PM (IST)

இந்திய அணி கேப்டன் கோலியின் நம்பிக்கையை காப்பாற்ற தோனி நிறைய ரன்கள் எடுக்க வேண்டிய நேரம் இது  என கங்குலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் தோனியுடன் கலந்து பேசி, அணியில் அவருக்குரிய பொறுப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் தோனி மிகப்பெரிய வீரர். 

இந்த வி‌ஷயத்தில் ஏதாவது முடிவு எடுப்பதற்கு முன்பாக அவர் மீண்டும் தன்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதே போல் 2019–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டிக்கான இந்திய அணியில் அவருக்குரிய இடம் குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டியது அவசியமாகும். வருங்காலத்தில் தோனியால் தனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண இயலாவிட்டால், அணி நிர்வாகம் மாற்று ஏற்பாட்டுக்கு (அதாவது வேறு விக்கெட் கீப்பரை சேர்க்க) தயாராக இருக்க வேண்டும்.

பேட்டிங்கில் தோனியை முன்வரிசையில் விளையாட வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். 4–வது வரிசையில் இறங்கும் போது, சிறிது நேரம் தடுப்பாட்டத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பிறகு வழக்கமான அதிரடியை தொடர்வதற்கு அவருக்கு உதவிகரமாக இருக்கும். தோனிக்கு, கேப்டன் கோலி ஆதரவாக பேசியிருப்பது பெரிய வி‌ஷயமாகும். தோனி சரியாக விளையாட சமயத்தில், கோலி அவருக்கு ஆதரம் கரம் நீட்டியுள்ளார். அந்த நம்பிக்கையை தோனி காப்பாற்ற நிறைய ரன்கள் எடுக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு கங்குலி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory