» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்: டி-20 போட்டியில் ராஜஸ்தான் வீரர் சாதனை!!

வியாழன் 9, நவம்பர் 2017 4:11:19 PM (IST)

டி-20 கிர்க்கெட் போட்டியில் ரன்கள் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி  ராஜஸ்தான் வீரர் சாதனை சாதனை படைத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த பவேர்  சிங் என்பவர் பெயரில்  20 ஓவர் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டியில் உள்ளூரை சேர்ந்த் திஷா கிரிக்கெட் அகாடமியும்,  பியர்ல் அகாடமி  அணிகளும் மோதின. டாஸ் வென்ற  பேர்ல் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.  திஷா அணி குறிப்பிட்ட 20 ஓவரில் 156 ரன்களை எடுத்தது. அடுத்து 157 ரன்கள் இலக்குடன் பியர்ல் அணி பேட்டிங்கை தொடங்கியது.  அதனால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகா‌ஷ் சவுத்ரி ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவர் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளையும், அடுத்த அவரின் 2-வது 3-வது ஓவரில்  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கடைசி ஓவர் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் ராஜஸ்தான் உத்தபிரதாச எல்லையில் உள்ள பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory