» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய அளவிலான டேக்வாண்டே போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவி தகுதி

புதன் 8, நவம்பர் 2017 5:32:46 PM (IST)



தேசிய அளவிலான டேக்வாண்டே போட்டிக்கு தூத்துக்குடி காராபேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தகுதி பெற்றார்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான டேக்வண்டோ போட்டியில் தூத்துக்குடி காராபேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 11வது வகுப்பு மாணவி தேவி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் கேரளாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த அவரை பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, உடற்பயிற்சி ஆசிரியை ஜெபமாலை, பயிற்சியாளர் ராமலிங்க பாரதி,  மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory