» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற‌ இயற்கை வழி வேளான் விளைபொருட்கள் அங்காடிகள்

வியாழன் 20, நவம்பர் 2014 2:57:00 PM (IST)தூத்துக்குடியில் இயற்கை வழி வேளான் விளைபொருட்கள் அங்காடிகள் திறக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் இயற்கை விவசாயம் மூலம் 3.88 மில்லியன் டன் பொருட்கள் அதாவது அரிசி, காய் கணிகள், மூலிகைப்பொருட்கள், பஞ்சு உள்ளிட்டவை உற்பத்தி செயப்படுகின்றன. இது மொத்த வேளான் உற்பத்தியில் 1 சதவிதம் மட்டுமே. இதேபோல் இயற்கை விவசாயம் மூலம் பயிரிடப்படும் இடத்தின் அளவு 0.6 மில்லியன் ஹெக்டேர். இது நாட்டில் பயிரிடப்படும் மொத்த பகுதியில் 1 சதவிததிற்கும் குறைவு. 

இந்தியாவின் பல பகுதிகளில் இயற்கை விவசாயம் வளருவதற்கு தனியார் அமைப்புகளின் முயற்ச்சியும், தனி நபர்களின் ஆர்வமும் தான் காரணம். எடுத்துகாட்டாக, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்தூவாரைச் சுற்றியுள்ள கரும்பு விவசாயிகள் ஓன்றாக சேர்ந்து பாரத்திய கிஸான் கிளப் என்ற அமைப்பை 2009ம் ஆண்டு உருவாக்கி, சர்க்கரை ஆலையை தொடங்கினார்கள். இதில் ஹரித்தூவாரைச் சுற்றியுள்ள 324 கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். இது தான், இந்தியாவின் சான்றளிக்கப்பட்ட முதல் சர்க்கரை ஆலையாகும். இதுபோன்று விவசாயிகள் ஓன்றினைந்தும் தனித்தனியாகவும் இயற்கை விவசாயத்தை வளர்த்து வருகின்றணர். 

கர்நாடக, கேரளா, ஆந்திரம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ஹிமாசல் பிரதேஷ், உத்திராகண்ட், சிக்கிம், நாகாலாந்து மற்றும் மிசோராம் மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தனி கொள்கைளை வகுத்துள்ளது. இதில் சிக்கிம், நாகாலந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் 100 சதவீதம் இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்புகின்றன. இயற்கை விவசாயத்திற்கு என்று தனிக் கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் கர்நாடகா, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆராயிச்சியும் மேற்கொண்டுள்ளது.

தமிழ் நாட்டைப் பொருத்தவரை, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைள் எடுத்து வந்தாலும், இதற்கென தனியான கொள்கைகள் உருவக்கப்படவில்லை. உதாரணமாக, தமிழக அரசு, விவசாயிக்ள் இயற்கை உரங்களை தாங்களே தயாரித்துக் கொள்ள பயிற்சி கொடுக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க போதாது.

தமிழ்நாட்டில் தற்போது இயற்கை வழி வேளான் விளைபொருட்கள் அங்காடிகள் திறக்கப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் வடபுறம் மீனாட்சிபுரத்தில் நலம் பசுமையகம் என்ற பெயரில் புதியம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி மரியராஜ்  ரசாயனம் கலப்படமற்ற இயற்கை வழியில் பயிற் செய்யப்பட்ட காய்கறிகள், பாராம்பரிய அரிசி வகைகள், மளிகைபொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து, விவசாயி மரியராஜ் கூறுகையில், இயற்கை வேளாண்மை என்பது பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே உபயோகித்து வேளான் பொருட்களை உற்பத்தி செய்வது. இந்த முறை நாம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்தது. முன் காலத்தில் இயற்கை விவசாயத்தை பயன்படுத்தியதால், உடல் வலிமை, ஆரோக்கியமாக நீண்டநாட்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த விவசாய முறையிலிருந்து நாம் மாறி, நச்சு தன்மை நிறைந்த பூச்சிக்கொல்லி முறைக்கு மாறிவிட்டோம்.  

தற்போது,  பூச்சிக்கொல்லி உபயோகிப்பதால் எற்படும் விளைவுகள் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மேல் கவனத்தை திருப்பியுள்ளது. இது இயற்கை விவசாயத்திற்கு புத்துணர்வை கொடுத்துள்ளது. ஆனால், இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பும் இருந்தும், இந்த பொருட்கள் சாமனிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. 

எங்களது குடும்பம் விவசாய குடும்பம். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட எனக்கு இயற்கை உரங்களை மட்டுமே உபயோகித்து வேளான் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஆசை. அதற்காக கரூரில் இருந்த மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் இதுகுறித்து பயிற்சி பெற்றேன். அவர் வழியில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இயற்கை வழி வேளான் விறபனை அங்காடியை திறந்துள்ளேன். விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு கைகுத்தல் அரிசி, மூங்கில் அரிசி, கவ்னி அரிசி, மாப்பிளை சம்பா, தூய மலைத்தேன், பசுநெய், நாட்டு சக்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி, சாமை, தினை, வரகு, குதிரை வாழி, சோளம், கம்பு, கேழ்வரகு, வாகை மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி போன்றவைகள் கிடக்கிறன. மேலும், பாசிப்பயிறு, வேர்க்கடலை, உளுந்தப்பருப்பு, கடலைபருப்பு, கொண்டக்கடலை, கொள்ளு, துவரம்பருப்பு போன்றவைகளும், குங்குமப்பூ, செம்பருத்தி சாம்பு போன்ற அழகு சாதனப்பொருட்களும் கிடைக்கின்றன என்றார்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளை பயன்படுத்தி அதில் விளைந்த விளை பொருட்களை சாப்பிட்டு பல்வேறு நோய்களுக்கு நாமே வித்திடுகிறோம். மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் கால்கடுக்க  காத்திருந்து, பல ஆயிரங்களை இழ்க்கிறோம். இது போன்ற நமது பாரம்பரிய இயற்கை வேளான் விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சாப்பிட்டு நலமோடு நாம் வாழ்வோம்.... அடுத்த தலைமுறைக்காவது எடுத்து காட்டாகவும் இருப்போமே.


மக்கள் கருத்து

ராஜேஷ்Aug 15, 2015 - 10:59:05 PM | Posted IP 117.2*****

இயற்கை உணவுதான் இனிய வாழ்வுக்கு வழி...

பென்சிகா் லுசன்Aug 15, 2015 - 10:55:13 PM | Posted IP 117.2*****

இயற்கை முறை விவசாயப் பொருள்கள் விலை கூடுதலாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தும் போது நமது மருத்துவச் செலவு குறைவாகவே இருக்கும்.

சாலை வேதசிகரம், உரிமையாளர், சுபிக் ஷா இயற்கை அங்காடிAug 27, 1422 - 03:30:00 AM | Posted IP 117.2*****

பூச்சிக்கொள்ளி மருந்துகளை பயன்படுத்தி அதில் விளைந்த விளை பொருட்களை சாப்பிட்டு பல்வேறு நோய்களுக்கு நாமே வித்திடுகிறோம். மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்து, பல ஆயிரங்களை இழ்க்கிறோம். இது போன்ற நமது பாரம்பரிய இயற்கை வேளான் விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சாப்பிட்டு நலமோடு நாம் வாழ்வோம்.... அடுத்த தலைமுறைக்காவது எடுத்து காட்டாகவும் இருப்போம். சுபிக் ஷா இயற்கை அங்காடி, அன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம் தொலை பேசி : 04339230432 அலைபேசி : 9842416432

arputharajJan 17, 2015 - 07:15:43 PM | Posted IP 59.96*****

nalam pasumaiyagam. ph04612323706,9443979706,8124992336

arputharajJan 15, 2015 - 03:54:33 PM | Posted IP 117.2*****

04612323706

மக்கள் குரல்Jan 11, 2015 - 05:40:15 PM | Posted IP 117.2*****

மக்கள் பயன்படுத்த வேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!

NanbanNov 20, 2014 - 04:15:07 PM | Posted IP 117.2*****

mugavari Mele kodukka pattullathu. Nalal Pasumaiyagam, Meenakshipuram, Near Ayyanar Urakkadai, Near Old Bus stand. Tuticorin

SivaNov 20, 2014 - 03:19:12 PM | Posted IP 37.22*****

Correct a intha shop entha place la irukku ,location sollunga sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory