» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் : ஏ.டி.ஜி.பி. பேச்சு

செவ்வாய் 11, நவம்பர் 2014 3:57:04 PM (IST)நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் நம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 400 வது கிளை பாளையங்கோட்டை அரியகுளம் ஆசிரியர்காலனி குறிஞ்சி மஹாலில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிளை திறப்பு விழாவிற்கு, வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹெச்.எஸ். உபேந்திரகாமத் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர். சி.சைலேந்திரபாபு புதிய கிளையை திறந்து வைத்தார். 

பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசுகையில், காவல் துறையில் பணியாறுவதற்கு முன்பாக வங்கியில் பணியாற்றி உள்ளேன். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 400வது கிளை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடத்துள்ளது. வங்கியில் தொடர்ந்து நான் பணியாற்றி இருந்தால் கூட இது போன்ற வாய்ப்பு கிடைத்திருக்காது. தூத்துக்குடியில் கடந்த 1921ம் ஆண்டு வியாபாரிகளின் முயற்சியால் தொலைநோக்கு திட்டத்துடன் துவங்கப்பட்ட இந்த வங்கி இன்று 93வது ஆண்டிற்கு அடியெடுத்து வைத்துள்ளது. ஊழியர்களின் முயற்சியாலும் அதிகாரிகளின் முயற்சியாலும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

பொதுமக்கள் இது போன்ற வங்கிகளில் பணம் செலுத்தவும், கடன்களும் பெற்று பயனடையலாம். அதைவிட்டுவிட்டு, கந்து வட்டி கும்பலிடம் சிக்கி விடாதீர்கள். மக்கள், பணம் பெறுவதற்காக பெயரிடப்படாத காசோலைகள், வெற்று பத்திரத்திரம் உள்ளிட்டவைகளில் கையெழுத்திட்டு போட்டு பணத்தை வாங்கிவிட்டு பின்னர் காவல் நிலையத்திற்கு வருகின்றனர். தற்போது காவல் நிலையத்திற்கு வரும் வழக்குகளில் பெரும்பாலானவை காசோலை மோசடி, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வருகின்றனர். 

நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. மக்கள் அனைவரும் வங்கி சேவைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதே வங்கிகள் தான். தொழில் வளம் இருந்தால் தான் நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட் பேங்கிங் சேவை வரவேற்கக் கூடியதாக இருந்தாலும் பாதுகாப்பான முறையில் அதை பின்பற்ற வேண்டும்.

சமீப காலமாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் நம் நாட்டில் உள்ள மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு பல கோடிகளை சுருட்டி விடுகின்றனர். உங்கள் வங்கி கணக்கில் ஒரு லட்சம் பணம் எடுத்ததற்கு நன்றி என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு, உங்களை ஒரு நம்பருக்கு பேச வைத்து, அந்த நபர்கள், வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, பணத்தை உடனடியாக எடுக்க விடாமல் தடுக்கிறோம் என்று உங்களிடம் வங்கி அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு போன்றவற்றை வாங்கி அதிலிருந்து பல லட்சங்களை எடுத்து விடுவார்கள். இது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் இது போன்ற சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், விக்ரமன், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், ராஜகுமாரன், கே.என்.ராஜன், சுந்தர், பிரபாகரன், கே.வி.ராஜன், முதன்மை பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை, பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, துணைப் பொதுமேலாளர் அன்பழகன் உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory