» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

எழுதப்படிக்க தெரியாத மாணவர்கள் இருப்பது சமூக பிரச்னை : முதன்மை கல்வி அதிகாரி வேதனை

ஞாயிறு 13, ஜூலை 2014 11:00:26 AM (IST)

பள்ளிகளில் எழுதப்படிக்க தெரியாத மாணவர்கள் இருப்பது மிகப்பெரிய அபாயகரமான சமூக பிரச்னை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வகுப்பறைகளில் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தது.

பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தலைமை ஆசிரியர்கள் வெற்றிகரமானவர்களாக உருவாவதற்கு எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் திகழ்வது, வழக்கத்தையும் பழக்கத்தையும் மாற்றி முன்மாதிரியாக நடந்துகொள்வது அவசியம். தியாகங்கள் செய்வது, இலட்சியத்தை அடைய தீவிரமும், அக்கறையும் காட்டுவதும் வேண்டும். மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு அவர்களை வழிநடத்துவது, புதிய சிந்தனைகளுடனும், யோசனைகளுடனும் இருப்பது போன்ற குணங்களுடன் திகழ வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள பிரச்னைகளை புரிந்துகொள்வதோடு மட்டுமின்றி அதற்கான தீர்வுகளையும் கண்டறிய வேண்டும். இன்றும் பல பள்ளிகளில் எழுத படிக்க தெரியாத மாணவர்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அபாயகரமான சமூக பிரச்னை. இதற்கு மிக சிறந்த தீர்வுகளை தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்டறிய வேண்டும். இப்படிப்பட்ட பிரச்னைகளில் ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தால் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Thoothukudi Business Directory