» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

மாணவர்கள் மார்க் வாங்கும் இயந்திரங்களாக மாறி வருகின்றனர் : நீதிபதி வெங்கட்ராமன் வேதனை

ஞாயிறு 13, ஜூலை 2014 10:28:41 AM (IST)

மாணவர்கள் மார்க் வாங்கும் இயந்திரங்களாக மாறி வருகின்றனர் என்று நீதிபதி வெங்கட்ராமன் வேதனை தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான கல்வி அறக்கட்டளை சார்பில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளி துவங்கப்பட்டு, அதன் திறப்பு விழா நிகழ்ச்சிகள் கூட்டாலுமூடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சைலஸ் ராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜாராம் வரவேற்றார். பாண்டிச்சேரி நுகர்வோர் ஆணைய தலைவர் நீதிபதி வெங்கட்ராமன் புதிய பள்ளியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: இன்று மாநில கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியாத நிலை ஏற்படுவதால் தான், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் தேவைப்படுகிறது. இன்றைய கல்விமுறை மனப்பாட முறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மார்க் வாங்கும் இயந்திரங்களாக மாறி வருகின்றனர். அறிவு ஜீவிகளாக மாற வேண்டியவர்கள் பள்ளி பாடப் புத்தகத்துடன் நின்று விடுகின்றனர். சிறு பிரச்னைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பதால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோர்ட் படியேறும் அவலம் நடைபெறுகிறது. இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான தலைவர் குமரேசதாஸ், துணை தலைவர் கேசவன், இணை செயலாளர்கள் தர்மராஜ், சந்தோஷ்குமார், பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார், புதுக்கடை பேரூராட்சி தலைவர் மோகனகுமார், பத்ரேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் இந்துமதி, துணை முதல்வர் சாந்தாபாய், பத்தேஸ்வரி கல்வியியல் கல்லூரி முதல்வர் பரிமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory