» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

பாலிடிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் : கட்சியில் சேர ரெடி - நடிகை நமீதா பேட்டி

வெள்ளி 18, அக்டோபர் 2013 7:25:29 PM (IST)

குமரிமாவட்டம் அஞ்சுகிராமத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா வந்திருந்தார்.

பின்னர் நடிகை நமீதா நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் அழகான இயற்கை வளம் நிறைந்த மாவட்டம். இதனால் நேற்றே கன்னியாகுமரி வந்து தங்கினேன். பகவதியம்மன் கோவில், விவேகானந்தர் பாறை, காந்திமண்டபம் ஆகியவற்றை பார்த்தேன். இது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. மேலும் இம்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள்.

தற்போது இளமை ஊஞ்சல் என்ற படத்தில் நடிகை விஜயசாந்தி போன்று ஆக்ஷன் ரோலில் நடித்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன். பாலிட்டிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல ஒரு கட்சியில் சேர வாய்ப்பை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். நல்ல வாய்ப்பு வந்தால் கட்சியில் சேர்வேன். பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் ஐடியா இப்போதைக்கு இல்லை. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த வரம். மோடி குஜராத்தை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறார். அவர் பிரதமர் ஆனால் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory