» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)



கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தைப்பூசம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மார்க்கெட் முருகன் கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. 

அதிலும் வடக்கு பகுதியில் கோவில் வாசல் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததால் பக்தர்களினால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மெயின் சாலை பகுதியில் இருந்த வாசலில் இருந்த பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் பரிதவித்தனர். மறுபுறம் மார்க்கெட் மெயின் சாலையில் இருபுறம் லாரிகள் நின்றதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை. பள்ளி நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory