» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் 8வது பொருநை புத்தகத் திருவிழா நிறைவு: ஆட்சியர் பாராட்டு!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:55:08 AM (IST)



திருநெல்வேலியில் 8வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் கடந்த 31.01.2025 அன்று 8வது பொருநை புத்தகத் திருவிழா தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகளும், கவியரங்கம், கலையரங்கம், பட்டிமன்றம, உள்ளுர் கலைஞர் படைப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.புத்தகத் திருவிழாவில் 11 நாட்கள் சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்ட தூய்மை பணியாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி ஊக்கப்பரிசு தொகையினை வழங்கினார்.

தொடர்ந்து இந்த புத்தகத் திருவிழாவில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 7 நபர்களுக்கு தலா ரூ.5000/- ஊக்கத்தொகையும், இரண்டாம் பரிசாக 7 நபர்களுக்கு தலா ரூ.3000/- ஊக்கத்தொகையும், மூன்றாம் பரிசாக 7 நபர்களுக்கு தலா ரூ.2000/- ஊக்கத்தொகையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பாராட்டினார்கள். மேலும், நன்கொடையாளர்கள் மற்றும் அரங்கம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பாராட்டினார்கள்.

சொந்த நூலகர்களுக்கான விருது மாவட்டத்தில் சொந்த நூலகம் அமைத்ததற்கான கேடயம் வழங்கப்பட்டது.பள்ளிக்கல்வித் துறை சார்பில் சக ஆசிரியர்களை கொண்டாடுவோம் மின்இதழை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரப்படுத்தினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 8வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 31.01.2025 அன்று தொடங்கப்பட்டு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகளும், கவியரங்கம், கலையரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகத் திருவிழாவில் ஆர்வமாக எழுத்தாளர்கள், மாணவ,மாணவியர்கள், ஆசிரியர்கள் பெரிய அளவில் பணியாற்றி சிறப்பித்துள்ளனர். அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

புத்தகங்கள் வாசிப்பது முக்கியமான ஒரு நிகழ்வாகும். புத்தங்கங்களை அதிகமாக வாசிப்பதன் மூலம் தனது அறிவுத்திறனனை மேம்படுத்த முடியும் அதன் மூலம் தனது சிந்தனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற முடியும். இந்த புத்தகத் திருவிழாவின் மூலம் பல்வேறு அறிய புத்தகங்களை வாசிப்பதற்கும், நாம் கேள்விப்பட்ட புத்தகங்களை பார்ப்பதற்கும், வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளிக்கல்வித் துறை மூலம் 252 பள்ளிகளிலிருந்து 25,023 மாணவ,மாணவியர்கள் பார்த்து பயன்பெற்றுள்ளனர். 

4,38,300 புத்தகங்கள் கூப்பன் இல்லாமலும், 4 இலட்சம் புத்தகங்கள் கூப்பன்கள் வழங்கியும் மொத்தம் 8,38,300 புத்தகங்களை பள்ளி மாணவ,மாணவியர்கள் வாங்கி பெற்றுள்ளனர். இந்த புத்தகத் திருவிழா நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், புத்தகத் திருவிழாவை நாம் பயன்படுத்தி கொண்டு நல்ல செயல்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி.அம்பிகா ஜெயின், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், துணை ஆட்சியர் பயிற்சி ஜெ.பி.கிரேசியா, தனி வட்டாட்சியர் அரசு கேபிள் டிவி க.செல்வன், பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன், மற்றும் எழுத்தாளர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory