» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:35:28 AM (IST)

நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. ஏற்கனவே நெல்லை அருகே கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் அம்மாநிலத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெருமாள்புரம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும், சம்பவத்தன்று அவர் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த மருந்துகள் காலாவதி ஆனதால், அந்த மருந்துகளை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் கொட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory