» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக புகார்: சீமானுக்கு போலீஸ் சம்மன்!

திங்கள் 10, பிப்ரவரி 2025 5:56:07 PM (IST)

பெரியார் குறித்து அவதூறாக பேசியது குறித்து விசாரிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கு வடலூர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 8ம்தேதி வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெரியாரைப் பற்றி அவதூறான கருத்துக்களை கூறினார். 

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்டபாணி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் வடலூர் போலீசார், பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுவது, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிந்தனர். 

இந்நிலையில் சீமான் வடலூர் காவல்நிலையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 14ம்தேதி நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என அவருக்கு காவல்துறை சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.












மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory