» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் வேட்டி, சேலைகள் குறித்து தவறாக சித்தரிப்பு: பாளை., வட்டாட்சியர் விளக்கம்

திங்கள் 9, டிசம்பர் 2024 5:30:58 PM (IST)

மழை வெள்ளத்தால் சேதமான வேட்டி, சேலைகளை அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மாவட்டத்தில் 46 நியாய விலைக் கடைகள் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து சேதமடைந்தது. அப்போது பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் வெள்ளத்தால் சேதமடைந்தது. 

இதுகுறித்து முறையாக துறை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு முறைப்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய தணிக்கை அனுமதி பெற்ற பின்னர் அழிக்கும் பொருட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை வெளியிடும்பொழுது அனைத்து தரப்பு கருத்துக்களையும் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு செய்தி வெளியிடுமாறு பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory