» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலுப்பகுடியில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம்
திங்கள் 9, டிசம்பர் 2024 4:21:12 PM (IST)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
உலக நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உலுப்பகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா தலைமை வகித்தார்.
ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் சுப்பிரமணியன்,காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் பீட்டர்,காசநோய் கல்வியாளர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு காசநோய் வராமல் பாதுகாப்பது குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் பேசினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.