» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூர கொலை: கணவர் வெறிச்செயல்!

செவ்வாய் 5, நவம்பர் 2024 8:53:41 AM (IST)

ஆலங்குளம் அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லகணேஷ் மகன் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு சிவனம்மாள் (30) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவு வழக்கம்போல் சுரேஷ்மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் கிடந்த அரிவாளால் சிவனம்மாளின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் சிவனம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிவனம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுரேசை போலீசார் தேடி வந்தனர். ஊருக்கு வெளிப்புறம் காட்டுப்பகுதியில் சுரேஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். 

அங்கு பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory