» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சி செவிலியர் மீது பாலியல் வன்முறை: தென்காசியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 5, நவம்பர் 2024 8:52:08 AM (IST)



திருச்சி செவிலியர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சமுக விரோதி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புபெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ.பெலிக்ஸ் மோனிகா  தலைமை தாங்கினார்.  மாவட்ட நிர்வாகிகள்  பிராங்ளின்,  கனகலட்சுமி , மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்  குமார் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.கே மாடசாமி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். 

தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில பொருளாளர் ஸ்டான்லி , மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன்,  தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்த் தான்ட பூபதி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இறுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.  மாவட்ட பொருளாளர் கே.சத்யா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory