» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி பைக் ஷோரூமில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு 3ஆண்டு சிறை!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:49:53 AM (IST)

தூத்துக்குடியில் பைக் ஷோரூமில் ரூ.40 லட்சம் பணத்தை  மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் ராஜ்குமார் (69) என்பவர் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்துள்ளார். இந்த ஷோரூமில் RTO அலுவலக வாகன பதிவு சம்பந்தமாக பணிபுரிந்து வந்த தூத்துக்குடி எழில் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் குருராஜ் (37) என்பவர் ஒவ்வொரு நாளும் நிறுவன கணக்காளரிடமிருந்து பணம் பெற்று அதை ஷோரூம் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தி பின்னர் RTO அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி வரும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் குருராஜ் என்பவர் மேற்படி ஷோரூம் நிறுவனத்தில் பெற்ற பணத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் மொத்தம் ரூ.40லட்சம் பணம் மோசடி செய்ததாக மேற்படி இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் ராஜ்குமார் அளித்த  புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு - I போலீசார் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரி குருராஜை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் - IV நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  குபேரசுந்தர்  நேற்று வழக்கின் குற்றவாளியான குருராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த மாவட்ட குற்றப்பிரிவு I காவல் ஆய்வாளர்  லட்சுமி பிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  கண்ணன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  வைரமணி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து

tuticorinOct 13, 2024 - 10:56:31 AM | Posted IP 162.1*****

asir automobile ( hero honda bike ) OPPOSITE COLLECTOR OFFICE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory