» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்

வெள்ளி 20, செப்டம்பர் 2024 11:46:35 AM (IST)

"என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று உங்களிடம் சொல்லி இருக்கிறேன்" என பதில் கூறினார்.

அதனை தொடர்ந்து வேட்டையன் படம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதனை தொடர்ந்து வேட்டையன், கூலி படங்கள் எவ்வாறு வந்துள்ளது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அனைத்தும் நன்றாக வந்துள்ளது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory