» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 4:47:52 PM (IST)

தஞ்சை அருகே  ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த 5 இளைகர்கள், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் 5 பேரும் குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக 5 பேரும் ஆற்று நீரில் மூழ்கி மாயமாகினர். த

கவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், கலைவேந்தன், கிஷோர், மனோகரன், பிராங்க்ளின், ஆண்டோ ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory