» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி!

செவ்வாய் 30, ஜூலை 2024 11:27:20 AM (IST)

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் போது, பொக்லைன் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 40), உளுந்தூர்பேட்டை நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றை ஆழ்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்தனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின் உரிமையாளர் கண்ணனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory