» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவுடன் இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

வியாழன் 28, செப்டம்பர் 2023 12:34:34 PM (IST)

பாஜக தேசியத் தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. நேரம் வரும்போது பாஜக கூட்டணியில் அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல்.

பாஜக தேசியத் தலைவர்கள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட்டணிக்கு இனி வாய்ப்பில்லை.  அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்கள் என்ற அச்சத்திலேயே திமுக கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்' என்று பேசினார், 


மக்கள் கருத்து

JAY JAY JAYSep 28, 2023 - 03:30:43 PM | Posted IP 172.7*****

அப்படியே நீங்கள் சேர்ந்தாலும் ... நீங்கள் தாய் கட்சி விடியலுடன் சேர்ந்து விடுங்கள்....ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பொருத்தமாக இருக்கும்...

கந்தசாமிSep 28, 2023 - 01:03:47 PM | Posted IP 172.7*****

நீயே ஒரு டம்மி பீஸ் உன் பேச்சு ஒரு டுபாக்கூர் நீ சொல்லி ஏதும் உருப்படியாக நடந்துள்ளதா போய்யா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory